அரசாங்கம் பதவி விலக வேண்டும்: கர்தினால் மல்கம் ரஞ்சித்

#SriLanka #Sri Lanka President #government #Ranil wickremesinghe #Malcolm Ranjith #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
அரசாங்கம் பதவி விலக வேண்டும்:  கர்தினால் மல்கம் ரஞ்சித்

அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி, புதிய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும் என கொழும்பு கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டை ஆள்பவர்கள் இன்று கவலையளிக்கும் ஒரு பரிதாபமான நிலையை உருவாக்கியுள்ளனர் 

எனவே அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் முதுகெலும்பு இருந்தால் பதவியை விட்டு விலகி, புதியவர்களை மக்கள் தெரிவு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கர்தினால் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் நீதித்துறையின் அதிகாரத்தை இழிவுபடுத்துவதில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்தினால் கேட்டுக் கொண்டார்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. 

உயர்நீதிமன்றம் 2023 மார்ச் 3 ஆம் திகதி வழங்கிய தீர்ப்பு ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றத்தை சமமாக கட்டுப்படுத்துகிறது என்பது தெளிவாகிறது. 

எனவே, அவர்கள் உயர்நீதிமன்ற தீர்ப்பை உரிய முறையில் பின்பற்ற வேண்டும். 

இல்லையேல், அது உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைத்து ஜனநாயகத்தின் அடிப்படையை குறைமதிப்புக்கு உட்படுத்தும் என்றும் கர்தினால் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசியதாக செய்திகள் வெளியாகின. 

அந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும்; இந்த முடிவு காரணமாக,நீதிமன்றத்தால் தங்கள் நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறுவதாகக் கூறினர். 

எனினும் இந்த விடயம் மிகுந்த அக்கறையுடன் பார்க்கப்பட வேண்டியதாகும்.

குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்தக் கோரிக்கை உயர் நீதிமன்றத்தின் கண்ணியம் மற்றும் சுதந்திரத்துக்குப் பொருந்தாதது.

அதேநேரம் நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் அடிப்படையில் நீதிமன்றங்களில் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. 

இந்தநிலையில் நீதித்துறை சுதந்திரம் பேணப்படுவதை உறுதி செய்ய, குறித்த இரண்;டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மல்கம் ரஞ்சித் இன்று கோரியுள்ளார்;.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!