350 கிராம் கொக்கெய்னுடன் பிரேசில் நாட்டவர் கைது

#drugs #Drug shortage #Police #Arrest #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
 350 கிராம் கொக்கெய்னுடன் பிரேசில் நாட்டவர்  கைது

பிரேசிலில் இருந்து இந்த நாட்டுக்கு வந்த வெளிநாட்டவர் ஒருவரால் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 350 கிராம் கொக்கெய்னுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வெளிநாட்டவர் பிரேசிலில் இருந்து இந்த நாட்டுக்கு வந்துள்ள போதிலும், அவர் மக்கெடோனியா பிரஜை என இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (13) சந்தேகநபரின் பயணப் பொதியை பரிசோதித்த போது சட்டவிரோத போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேக நபர் கட்டார் எயார்வேஸ் விமானமான QR664 மூலம் காலை 8.30 மணியளவில் இலங்கை வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கொக்கேயின் சந்தைப் பெறுமதி 17 மில்லியன் ரூபா என சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் 54 வயதுடையவர் எனவும் அவர் முதல் தடவையாக இலங்கை வந்துள்ளார்.

கொக்கெய்ன் போதைப்பொருள் சூப் பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்ததாக சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!