யாழ்ப்பாணம் மாதகலில் முரல் மீன் திருவிழா: விழாக்கோலம் பூண்ட கடற்கரை

#SriLanka #Jaffna #Fish #Fisherman #Festival #Lifestyle #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணம் மாதகலில் முரல் மீன் திருவிழா: விழாக்கோலம் பூண்ட கடற்கரை

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் விசேட அம்சமாக உள்ள முரல் மீன்படுகை அதிகரித்த காலமாக இம்மாதம் உள்ள நிலையில் மீன் விற்பனை அதிகரித்துள்ளது.

இநத்நிலையில் மாதகல் மேற்கு கடற்கரை இரவு நேரங்களில் விழாக்கோலம் பூண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதகல் கடற்பரப்பில் பிடிக்கப்படுகின்ற முரல் மீன் தனித்துவமானதும் சுவை வாய்ந்ததுமாக இருப்பதாகவும் அதிகளவானோர் குறித்த கடற் பரப்புக்கு தமது குடும்பங்களுடனும் நண்பர்களு டனும் சென்று படகுகளில் பிடித்துவரப்படும் மீனை கரையில் உடனடியாகவே கொள்வனவு செய்து வருகின்றனர். இதனால் மீனவர்கள் மீண்டும் உடனடியாக முரல் மீனைப் பிடிக்க கடலுக்குச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

குறிப்பாக ஒரு மீன் 70 ரூபா முதல் 100 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையில் வடமாகாண சுற்றுலாப் பணியகம் இக்காலப் பகுதியை மாதகல் பகுதியை சுற்றுலாவுக்கு உகந்த காலமாக அடையாளப்படுத்தியுள்ளது. இதுதவிர குறித்த பகுதியில் சுண்டல் உட்பட பல உணவு வகைகளும் பிரதேசவாசிகளால் விற்பனை செய்யப்படுகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!