ஐ நா முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் விவகாரம்: விமலை கைது செய்ய பிடியாணை

#SriLanka #Wimal Weerawansa #Arrest #Court Order #UN #Human Rights #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
ஐ நா முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் விவகாரம்: விமலை கைது செய்ய பிடியாணை

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் அல் ஹுசைனை பொதுவெளியில் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (13) பிடியாணை பிறப்பித்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பிலான நீதவான் விசாரணை நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட போது, ​​முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகத் தவறியதன் காரணமாகவே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் சைட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது, ​​பிரதிவாதிகள் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக நெடுஞ்சாலையை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர். .

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸ்ஸம்மில் தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்களான வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் ரொஜர் செனவிரத்ன ஆகியோர் இங்கு பிரதிவாதிகளாக உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!