யாழ் தேவிக்கு இன்று காலை ஏற்பட்ட கதி!
#SriLanka
#Anuradapura
#Train
#Accident
#Colombo
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த யாழ் தேவி விரைவு புகையிரதம் ஒருகொடவத்த புகையிரத பாலத்திற்கு அருகில் இன்று காலை தடம் புரண்டுள்ளது.
இரண்டு புகையிரத பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக புகையிரத பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இந்த மும்முனைப் பகுதியில் மூன்றாவது தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த இந்த ரயில், இரண்டாவது பாதைக்கு மாறச் செல்லும் போது தடம் புரண்டது.
இதன் காரணமாக பிரதான மார்க்கத்தில் இயங்கும் புகையிரத சேவை தடைபட்டுள்ளதாக பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு நோக்கி வரும் சில புகையிரதங்களில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தடம் புரண்ட யாழ்தேவி புகையிரதத்தை வழமைக்கு கொண்டுவரும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.



