ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அஞ்சப்போவதில்லை: மஹிந்த உறுதி
#SriLanka
#srilanka freedom party
#Mahinda Rajapaksa
#Election
#Election Commission
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

தேர்தலை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அஞ்சப்போவதில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கிராம மட்டத்தில் பணியாற்றிய கட்சி என்பதனால் தமக்கு தேர்தலை கண்டு அச்சமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். பல தரப்பினர் தம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் எமக்கு அச்சமில்லை.
கிராமங்களில் வசிப்பவர்களின் அபிலாஷைகள், தேவைகள் மற்றும் விருப்பங்களை அங்கீகரிக்க பல அரசியல் கட்சிகள் தவறிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் மட்டும் பேசுவதன் மூலம் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.



