யாழ். மாவட்டம் தொடர்பில் மாவட்ட செயலகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

யாழ் மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட 15 பிரதேச செயலக பிரிவுகளில் போதிய உணவு இல்லாமல் 13 ஆயிரத்து 888பேர் இருப்பதாக யாழ் மாவட்ட செயலக புள்ளி விபரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஊர்காவற்துறை பிரதேச செயலகம் 2ஆயிரத்தி 966 பேருடன் முதலிடத்திலும், 2ஆயிரத்து 618 பேர் பருத்தித்துறையிலும் மூன்றாவது இடத்தில் சங்கானை பிரதேச செயலக பிரிவில் 2ஆயிரத்து 245 பெரும் உள்ளனர்.
உடுவில் பிரதேச செயலகம் ஆயிரத்து 800 பேர், நெடுந்தீவு பிரதேச செயலகம் 932 பேர், மருதங்கேணி பிரதேச செயலகம் 705 பேர், வேலணை பிரதேச செயலகம் 682 பேர், கோப்பாய் பிரதேச செயலகம் 564 பேர், யாழ் பிரதேச செயலகம் 124 பேர், சாவகச்சேரி பிரதேச செயலகம் 120 பேர், சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் 108 பேரும், காணப்படுகின்றனர்.
யாழ் மாவட்டத்தில் மந்த போசாக்கு உள்ளவர்களாக 8ஆயிரத்து 112 பேர் காணப்படுவதுடன் அவர்களில் 5 வயதுக்கு குட்பட்டவர்கள் 3ஆயிரத்து 796 பேரும் 5 தொடக்கம் 9 வயது வரை 2ஆயிரத்து 969 பேரும் 10 தொடக்கம் 17 வயது வரை 2ஆயிரத்து 347 பேரும் உள்ளனர்.



