சிறைபிடிக்கப்பட்டுள்ள 16 தமிழக கடற்றொழிலாளர்களை மீட்க உதவி செய்யுமாறு அண்ணாமலை ஜெய்சங்கருக்கு கடிதம்

#annamalai #jeishankar #India #SriLanka #Lanka4
Kanimoli
2 years ago
 சிறைபிடிக்கப்பட்டுள்ள 16 தமிழக கடற்றொழிலாளர்களை மீட்க உதவி செய்யுமாறு அண்ணாமலை ஜெய்சங்கருக்கு கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 16 தமிழக கடற்றொழிலாளர்களை மீட்க உதவி செய்யுமாறு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

சுpறை பிடிக்கப்பட்டவர்கள் விரைவில் நாடு திரும்புவதற்கு வெளியுறவு அமைச்சகம் தலையிட வேண்டும் என்று அண்ணாமலை கோரியுள்ளார்.

இந்த 16 கடற்றொழிலாளர்களும் இலங்கை கடற்படையினரால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக இலங்கை அதிகாரிகளால்,இந்திய கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் குற்றம் சுமத்தியிருந்தது.

தமது கடற்றொழிலாளர்களுக்கு எதிராக வன்முறை, பிரயோகிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!