தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட போது ஏன் போராடவில்லை - யாழில் பதில் வழங்காத வசந்த முதலிகே

#wasantha muthalige #University #student union #Lanka4
Kanimoli
2 years ago
தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட போது ஏன் போராடவில்லை - யாழில் பதில் வழங்காத வசந்த முதலிகே

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் செயற்பாட்டாளர்கள் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டபோது ஏன் மௌனம் காத்தீர்கள் என ஊடகவியலாளர் எழுப்பிய  கேள்விக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் வசந்த முதலிலேயே பதில் வழங்காமல மொளனம் காத்தார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பிரதி நிதிகளுக்கும் யாழ் பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றிய பிரதிகளுக்கும் இடையிலான சந்திப்பு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.

சுமார் இரு மணித்தியாலங்கள் இடம்பெற்ற சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.இதன் போது கருத்து தெரிவித்த வசந்த முதலிகே,

 பயங்கரவாத தடைச் சட்டம் இந்த நாட்டில் இருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும் அதனை நீக்குவதற்கு பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் ஒன்றாக இணைந்து  தொடர் போராட்டம் ஒன்றை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது வடக்கு மக்களுடைய பிரச்சினைகளை  நன்கு அறிவதாகவும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதன்போது கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் 30 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாத தடைச் சட்டம் மூலம் தமிழ் மக்கள் நசுக்கப்பட்டு வருகிறார்கள் அப்போது குரல் கொடுக்காத நீங்கள் ஏன் தற்போது  பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் 

அதை மட்டும் அல்ல அதஎ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் பல முஸ்லிம்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏன  குரல் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

பதில் வழங்கிய வசந்த முதலிகே தமிழ் முஸ்லிம் மக்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் எந்த பதிலும் வழங்கவில்லை 

 மாறாக அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் மற்றும் 13வது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்க வேண்டுமென கூறியதுடன் வடக்கு பல்கலைக்கழகம் மாணவர்கள் தம்முடன் இணைந்து குரல் கொடுக்க முன்வருமாறு அழைப்பை விடுத்துச் சென்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!