பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு

#Protest #Jaffna #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு

பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

டாபிந்து கூட்டமைப்பு எனும் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தின நிகழ்வு இன்று கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் குறிதத் பெண்கள் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் சிறிகாந்தி தலைமையில் இடம்பெற்றது

 குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அபவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்டத்தின் கரைச்சி பிரதேசத்திலிருந்து பெண்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் கவனயீர்ப்ப போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் பெண்களிற்கான உரிமைகள், தொழில் உரிமைகள் உள்ளிட்டவற்றை பாதுகாத்து தருமாறு கோரி பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர். இதன்போது, பெண்களிற்கான தொழில் சார் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவு்ம, அதிகரித்த மின்கட்டணம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தானர்.

இந்த நிலையில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகளவில் நெருக்கடிக்குள்ளாவதாகவும் தெரிவித்த அவர்கள், இதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசாங்கம் ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!