கடந்த 24 மணிநேரத்தில் 4இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
#Robbery
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுன்னாகம், யாழ்ப்பாணம், அச்சுவேலி, கோப்பாய், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நான்கிற்கும் மேற்பட்ட நூதனமான மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடு தற்போது வரை எவரும் கைது செய்யப்படவில்லை.
சிசிடிவி கேமரா உதவியுடன் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கை யினை முன்னெடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.



