சைவசமயத்தவர்களின் சமய அடையாளமான, முழுமுதல் கடவுளாக திகழும் நடராஜ பெருமானின் திருவுருவ சிலையொன்று பிரதிஷ்டை!

Prabha Praneetha
2 years ago
சைவசமயத்தவர்களின் சமய அடையாளமான, முழுமுதல் கடவுளாக திகழும் நடராஜ பெருமானின் திருவுருவ சிலையொன்று பிரதிஷ்டை!

கிளிநொச்சி மாவட்டத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆனையிறவு தட்டுவான் கொட்டி சந்தியில் அமைந்துள்ள சுற்றுலா வணிக வளாகத்தில் இன்று சைவசமயத்தவர்கள் சமய அடையாளமான முழுமுதல் கடவுளாக திகழும் நடராஜ பெருமானின் திருவுருவ சிலையொன்று பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டுள்ளது.

குறித்த  பிரதேசத்தில் இருக்கும் சைவ பாரம்பரியத்தின் அடையாளமாக எதிர்காலத்தில் இந்த நடராஜர் சிலை அம்சம் திகழும் என அங்குள்ள சைவப்பெருமக்களால் போற்றிபாராட்டப்படுகின்றது.

குறித்த நிகழ்வில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரான சிவஞ்சான ஸ்ரீதரன் அவர்களும் மற்றும் இப்பிரதேசத்தில் இருக்கக்கூடிய சைவ மதகுருமார்களும் , சைவ முதன்மை செயல்பாட்டாளர்களும் ,சைவபக்தர்களும் பெருமளவில் கலந்து இந்நிகழ்வில் சிறப்பித்திருக்கின்றனர் .

குறித்த இடமானது நீண்டகாலமாக வரலாற்றுரீதியாக , பூர்வீக ரீதியாக தமிழர்களின் பாரம்பரிய பிரதேசத்தை மையமாக கொண்டு அமைந்திருப்பதன் காரணமாக இன்று இந்த நடராஜ சிலையினுடைய பிரதிஷ்டை என்பது இந்த பிரதேசத்தில் மிக பெருமைக்குரிய விடயமாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!