உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான குழப்பங்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நெருக்கடி

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான குழப்பங்களுக்கு மத்தியில், ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உட்கட்சி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஆளுநர் சரத் ஏக்கநாயக்கவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நியமித்தமையே சர்ச்சைக்கு வழிவகுத்தது.
இந்த நடவடிக்கையானது சிறிசேனவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிற்கும் இடையே மோதல் போல் தோன்றியதையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
எனினும் சிறிசேனாவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவாளர்களும் ஜெயசேகரவுடன் எந்த மோதலையும் மறுத்துள்ளனர்.
ஏகநாயக்க, ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சிறிசேனவினால் கடந்த திங்கட்கிழமை நியமிக்கப்பட்டார்.
தயாசிறி ஜெயசேகர,தனிப்பட்ட பயணமாக ஐக்கிய ராச்சியம் சென்றுள்ள நிலையில் அவர் எதிர்வரும் 20ஆம் திகதி நாடு திரும்பும்வரையிலேயே சரத் ஏக்கநாயக்க பதில் செயலாளராக பொறுப்பில் இருப்பார் என்று மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்



