போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைன் சென்ற பின்லாந்து பிரதமர்

#Finland #PrimeMinister #Ukraine #Russia #War #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைன் சென்ற பின்லாந்து பிரதமர்

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியது. ரஷிய படைகளின் தாக்குதல்களை உக்ரைன் பாதுகாப்பு படை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. 

இந்த போரில் உக்ரைன் ராணுவத்திற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவி மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.

உக்ரைனின் உள்கட்டமைப்புகளை தகர்க்கும் நோக்கில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது. 

சர்வதேச நாடுகளில் தங்களுக்கு மேலும் ராணுவ உதவிகளை வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்து வருகிறார்.

இந்நிலையில் பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின், போருக்கு மத்தியில் உக்ரைன் சென்றடைந்தார். அவரை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்று உரையாடினார். 

ரஷியாவுடான ஓராண்டு கால போரில், உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்கியதற்காக பின்லாந்திற்கு நன்றி தெரிவிப்பதாக ஜெலன்ஸ்கி கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!