சீனாவின் பெய்ஜிங் நகரில் பெய்த புழுக்கள் மழை - இயற்கை அழிவின் அறிகுறியா?

சீனாவின் பெய்ஜிங் நகரில் புழுக்கள் மழை குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறி இருந்தாலும் இன்னும் சில விஷயங்களுக்கு நம்மிடம் பதில் இல்லை.
குறிப்பாக வினோதமான விசித்திரமான இயற்கை நிகழ்வுகள் வரும்போது நாம் அதிர்ச்சியில் ஆழ்ந்து விடுகிறோம். அப்படி நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும் நிகழ்வு ஒன்று தற்போது சீனாவில் நடந்துள்ளது.
சீனாவின் பெய்ஜிங் நகரில் திடீரென புழுக்கள் மழை பெய்துள்ளது. மேலும் அவற்றில் பூச்சிகளும் இருந்ததாக சில ஊடகங்கள் கூறுகின்றன.
மழைக்குப் பிறகு நகரின் பல தெருக்களில் உள்ள வாகனங்கள், கடைகள் மற்றும் தெருக்களில் புழுக்கள் அதிகளவு தோன்றியதால் மக்களும் அச்சடைந்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் இது திடீரென உருவான சூறாவளியால் இந்த புழுக்களை நகருக்குள் கொண்டு வந்திருக்கலாமென கூறுகின்றனர்.
மேலும் இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.



