சீனாவின் புதிய பிரதமராக லி கியாங் தேர்வு

சீன நாட்டில் நேற்று வரை லி கியான் என்பவர் பிரதமராக பதவி வகித்து வந்தார். இவர் பதவிக்கு வந்த பிறகு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வார் என பொதுமக்கள் அதிக நம்பிக்கை கொண்டிருந்தனர்.
ஆனால் அவருடைய அதிகாரங்களை சீனா அதிபர் ஜி ஜின்பிங் கட்டுப்படுத்தி ஓரங்கட்டினார். இந்த நிலையில் தன்னுடைய பதவி காலம் முடிந்ததும் நேற்று அவர் நாட்டு மக்களிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டார்.
ஆனால் அவர் ஓய்வு பெறும் வயதுக்கு முன்னரே கட்சியின் நிலை குழுவில் இருந்தும் விலகியுள்ளார். இந்த நிலையில் அந்நாட்டின் புதிய பிரதமராக லி கியாங் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து சீன அதிபர் ஜி ஜின்பிங் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கபட்டவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார். குறிப்பாக புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லி கியாங் 40 ஆண்டுகளாக அரசியல்வாதியாகவும் அதிபர் ஜி ஜின்பிங்கின் செயலாளராகவும் இருந்துள்ளார்.



