எதிர்காலத்தில் மருந்துகள், உணவு மற்றும் நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதிப் பொருட்களின் விலைகள் படிப்படியாகக் குறைய வேண்டும்- ரஞ்சித் சியம்பலாபிட்டிய
#srilankan politics
#Tamil People
#Tamil
#sri lanka tamil news
#Lanka4
#SriLanka
Prabha Praneetha
2 years ago

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதால், எதிர்காலத்தில் மருந்துகள், உணவு மற்றும் நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதிப் பொருட்களின் விலைகள் படிப்படியாகக் குறைய வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ரூபாயின் மதிப்பு வலுவடைவது தற்போது ஏற்றுமதியில் ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தினாலும், இது தற்காலிகமான நிலைதான் என்றார்.
ஏற்றுமதி பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை குறைவினால் எதிர்காலத்தில் அந்த ஏற்றுமதி பொருட்களுக்கு பாதகமான பாதிப்புகள் ஏற்படாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இறக்குமதி பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டுமானால், அதனை முறையான நிர்வாகத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்



