சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கைக்கு கிடைக்குமா? Fitch Ratings நிறுவனம் வெளியிட்ட தகவல்

#SriLanka #IMF #Finance #Dollar #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கைக்கு கிடைக்குமா? Fitch Ratings நிறுவனம் வெளியிட்ட தகவல்

2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனுதவியை  இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளும் என தாம் நம்புவதாக Fitch Ratings நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனுதவி தொடர்பில் இலங்கை ஏற்படுத்திக்கொண்ட ஊழியர் மட்ட உடன்படிக்கை,  எதிர்வரும் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது. 

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியானது இலங்கையின் அந்நியச்செலாவணி பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவியாக அமையும் என Fitch Ratings நிறுவனம் நேற்று வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும்,  உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு கால எல்லையானது, நிச்சயமற்றதாகவே காணப்படுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இலங்கையின் முக்கியமான உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் வழங்கியுள்ள நிதி உத்தரவாதமானது அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு போதுமானது எனவும் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கு இது உதவும் என தாம் கருதுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் கடன் நிலைத்தன்மைக்கான முக்கிய அளவுகோல்களை அடையக்கூடியதாக இருக்குமானால், கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை அது இலகுவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை தொடர்பான கடன் தர மதிப்பீடுகள் மீளாய்விற்கு உட்படுத்தப்படலாம் எனவும்  Fitch Ratings நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!