காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை - இருவர் கைது

#SriLanka #Jaffna #Police #Kangesanthurai #Arrest #Crime #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
காங்கேசன்துறை  விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை - இருவர் கைது

நேற்றையதினம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சீலாப்புலம் பகுதியில் வெவ்வேறு குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தெரியவருகையில்,

சீலாப்புலம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஆண் ஒருவர் 4500 மில்லிலீட்டர் கசிப்பு மற்றும் வாள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இதேநேரம் அதே பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஒருவர் 3000 மில்லிலீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. உதவிப் பொலிஸ் பரிசோதகர் அசேல வத்துக்கார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் சான்றுப் பொருட்களுடன் பாரப்படுத்தப்பட்டனர். அவர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!