பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது!

#SriLanka #Sri Lanka Teachers #strike #University #taxes #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது!

பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

அரசாங்கத்தின் வரிச்சலுகைக்கு எதிராக இவர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்கத்தினரால் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையுடன் இணைந்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் பணிப்புறக்கணிப்பு காரணமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷயாமா பன்னஹக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய வரிக் கொள்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நேற்று தொழில் வல்லுனர்களின் ஒன்றியம் நிதியமைச்சுக்கு அழைக்கப்பட்டது.
நிதி அமைச்சின் செயலாளருடனான கலந்துரையாடல் வெற்றியளிக்கவில்லை என தொழில் வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வரும் 13ஆம் திகதி முதல் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தொழிற்சங்கங்கள் பல திட்டமிட்டுள்ளன.

இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 4 மாகாணங்களில் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!