எதிர்ப்பாளர்களைக் கட்டுப்படுத்த வந்த குழு அவன்ட் காட் துணை இராணுவக்குழுவாக இருக்கலாம் - அனுரகுமார

#SriLanka #Protest #Weapons #Sri Lankan Army #avant-garde #AnuraKumaraDissanayake #sri lanka tamil news #Lanka4
Prasu
2 years ago
எதிர்ப்பாளர்களைக் கட்டுப்படுத்த வந்த குழு அவன்ட் காட் துணை இராணுவக்குழுவாக இருக்கலாம் - அனுரகுமார

இலங்கையில் எதிர்ப்பாளர்களைக் கட்டுப்படுத்த ஆயுதங்கள் மற்றும் தடிகளை ஏந்திய இராணுவக் குழுக்கள் அவன்ட்-கார்ட் நிறுவனத்தின் துணை இராணுவக்குழுவாக  இருக்கலாம் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இன்று சந்தேகம் வெளியிட்டுள்ளார்;.

போராட்டங்களைக் கட்டுப்படுத்த வந்த இராணுவக் குழுக்களை உத்தியோகபூர்வ அரசாங்க இராணுவம் என உறுதிப்படுத்த முடியாது என இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

எனவே அவர்கள் கோட்டாபய ராஜபக்சவினால் பயன்படுத்தப்பட்ட கடல் பாதுகாப்பு துணை இராணுவக்குழுவான அவன்ட் காட் துணை இராணுவக்குழுவாக இருக்கலாம் என்று அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ இராணுவம், ஆயுதங்கள் மற்றும் தடிகளை எடுத்துச் செல்லும்போது சரியான நீளம், வடிவம் மற்றும் நிறத்துடன் நிலையான தடியடிகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

எனினும் அரசாங்க எதிர்பாளர்களை தடுக்க வருவோரால் நாட்டில் உள்ள இராணுவத்தினருக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவன்ட்-கார்ட் நிறுவனமே இந்த வகையான துணை இராணுவக் குழுக்களை வைத்திருந்தது என்றும் அனுரகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!