போராட்டத்தின் போது இராணுவ வீரர்கள் தடிகளை வைத்திருந்தார்களா என விசாரணை ஆரம்பம்

கடந்த 7ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் நடத்திய போராட்டத்தை கலைக்க வந்த இராணுவத்தினரின் கைகளில் இரும்பு அல்லது மரத்தடிகள் இருந்ததா என விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்பட்ட இரும்பு மற்றும் மரத்தடிகளுடன் இராணுவ வீரர்கள் குழுவொன்றின் புகைப்படங்கள் பரவியதன் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினரின் தலையீடு இல்லை எனவும், கலகத் தடுப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னிலையில் பொலிஸார் இருந்த போதும் இராணுவத்தினர் முன்னோக்கி கடமைகளுக்கு அனுப்பப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.



