எல்லோரும் என் எதிரியாக இருக்க விரும்புகிறார்கள்: மைத்திரியின் டிக்டொக் பாடல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டிக்டொக்கில் பதிவிட்டுள்ள எல்லோரும் எனக்கு எதிரியாக இருக்க விரும்புகிறார்கள் என்ற வாசகத்துடன் அமைந்த பாடலுடன் அவரது படங்களைக் காட்டும் பதிவு ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த டிக்டொக் இடுகையில், ஆர்கேன்: லீக் ஒஃப் லெஜெண்ட்ஸ் தொடரிலிருந்து இமேஜின் டிராகன்ஸ் என்ட் ஜேஐடி என்ற பாடல் சேர்க்கப்பட்டுள்ளது.
பாடலின் வார்த்தைகள் 'எல்லோரும் என் எதிரியாக இருக்க விரும்புகிறார்கள்..... அனுதாபத்தை விட்டுவிடுங்கள், எல்லோரும் என் எதிரியாக இருக்க விரும்புகிறார்கள்' என்று கூறுகிறது.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக சிறிசேன தற்போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
பயங்கரவாத தாக்குதல்களுக்கு முன்னதாக வழங்கப்பட்ட முன்னெச்சரிக்கைகளை புறக்கணித்ததாக குற்றம் சாட்டி முன்னாள் ஜனாதிபதியை சிறையில் அடைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலைலேயே அவரின் டிக்டொக் பதிவு வெளியாகியுள்ளது.



