கடத்தப்பட்ட ஹயஸ் வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் மீட்பு
#Police
#Arrest
#Jaffna
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

யாழ். கைதடியில் கடத்தப்பட்ட ஹயஸ் வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் அநாதரவாக விடப்பட்ட நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது.
யாழ். கைதடி மேற்கில் விற்பனைக்காக விடப்பட்டிருந்த ஹயஸ் வாகனத்தைப் பார்வையிட வந்த நபர்கள் அதனை ஓடிப் பார்ப்பதாக கூறிக் கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம்(04)இடம்பெற்றுள்ளது.
அதனையடுத்து, வாகன உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த ஹயஸ் வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்திற்கு அருகாமையில் இலக்கத் தகடுகள் அகற்றப்பட்டு, அநாதரவாக விடப்பட்டிருந்த நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



