சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
#Tamil
#luxury vehicle
#Tamil People
#Tamilnews
Prabha Praneetha
2 years ago

இலங்கையில் சொந்த வாகனங்களை வைத்திருப்பவர்கள் பாராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழுதுபார்ப்பு மற்றும் சேவைகளுக்கு பணம் இல்லாததால், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பத்து லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் நாடு முழுவதும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன பழுதுபார்ப்பு துறை தொடர்பான வட்டாரங்கள் தெரிவித்தன.
இவற்றில் ஏறக்குறைய பாதி வாகனங்கள் முறையான சேவை விநியோகம் இல்லாத காரணத்தால் முற்றிலும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வாகன உதிரிபாகங்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதால், பல வாகனங்களில் உதிரி பாகங்களின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளதாகவும், இதனால் வாகனங்களின் பாவனைக்காலம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் வாகன சேவை வழங்குநர்கள் தெரிவிக்கின்றனர்.



