ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்த 75 வயதுப் பாட்டி

#School #School Student #sports #Sports News #Jaffna #Lanka4
Kanimoli
2 years ago
ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்த 75 வயதுப் பாட்டி

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான  விக்ரோறியா கல்லூரியில் கடந்த 03.03.2023 வெள்ளிக்கிழமை அன்று  இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் திருமதி.எஸ். சிவகுமார் தலைமையில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் மாணவர்களின் பல்வேறு போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

குறித்த விளையாட்டு போட்டியில்  பழைய மாணவர்களிற்கான ஓட்டப் பந்தய நிகழ்வு இடம்பெற்றது.

அந்த  ஓட்டப்பந்தய நிகழ்வில் அப்பாடசாலையின் பழைய மாணவிகள் பலர் பங்குபற்றி இருந்தார்கள்.

ஆயினும் அதில் சிறப்பு யாதெனில் அந்த பழையமாணவர் ஓட்டப்பந்தயத்தில் குறித்த பாடசாலையில் படித்த  75 வயதுடைய  புனிதவதி என்ற மூதாட்டி ஒருவர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு அதற்கான முதல் பரிசினை தட்டி சென்றுள்ளார்.

இவ்வாறாக இளம் பழைய மாணவிகளுடன் போட்டி போட்டு ஓடி தனது திறமையினையும், சாதனை படைக்க வயது எந்த தடையும் இல்லை என்பதனையும் நிரூபித்து காட்டிய மூதாட்டி புனிதவதி பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!