பொருளாதார நெருக்கடியில் உதவிய இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த இலங்கை வெளியுறவு அமைச்சர்

#India #SriLanka #sri lanka tamil news #Ali Sabri #Lanka4 #Tamilnews
Prathees
2 years ago
பொருளாதார நெருக்கடியில் உதவிய இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த இலங்கை வெளியுறவு அமைச்சர்

இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் இந்தியா உதவியதற்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் மொஹமட் உவைஸ் மொஹமட் அலி சப்ரி மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் இடம்பெறும் ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்து கொண்ட இலங்கை வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் மீட்பு மற்றும் நிலைப்படுத்துதலின் மிகப்பெரிய பங்காளியாக இந்தியா உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, இலங்கைக்கு செய்ததை மற்ற எல்லா நாடுகளும் ஒன்றிணைந்துகூட செய்யவில்லை என்று தாம்; நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

3.9 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கடன் வரி இலங்கைக்கு ஒரு உயிர்நாடியை வழங்கியது.

இலங்கை இந்தியாவிற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறது என்று சப்ரி தெரிவித்துள்ளார

நாடு இந்த மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதிய உதவித் திட்டத்தை எதிர்பார்க்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!