நோபல் விருது அறிவிக்கப்பட்ட நபருக்கு பெலாரஸ் நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு!
#world_news
#Breakingnews
#Prize
Mani
2 years ago

2022ம் ஆண்டு அமைதிக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்ட 3 பேர்களில் ஒருவரான 60 வயதான Ales Bialiatski-க்கு பெலாரஸ் நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பெலாரஸ் நாட்டில் கடந்த 2020ம் ஆண்டு முதல் அதிபர் Lukashenko-க்கு எதிராக நீடித்த போராட்டத்தை ஒடுக்க ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது அந்த கைது நடவடிக்கையின்போது Ales Bialiatski-யும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் மீது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான செயல்களுக்கு நிதியுதவி அளித்ததாகவும், கடத்தலில் ஈடுபட்டதாகவும் வழக்கு தொடுக்கப்பட்டது.



