சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வருகிறது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்!

#technology #Tech
Nila
2 years ago
சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வருகிறது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்!

ஆப்பிள் ஐ போன் நிறுவனத்துக்குத் தேவையான ஐபோன் மொபைல் போன்களை உற்பத்தி செய்து வழங்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் பெங்களூருவில் 700 மில்லியன் டாலர் மதிப்பில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.

சீனா - அமெரிக்கா இடையிலான உறவு சீர்குலைந்து வரும் நிலையில், வர்த்தகத்துக்கு உகந்த சூழலை இந்தியா கொடுக்கும் என அந்நிறுவனம் நம்புகிறது.

பெங்களூரு விமான நிலையம் அருகே சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமையவுள்ள ஐ போன் உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலையால் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

நேற்று முன் தினம் ஃபாக்ஸ்கான் தலைவர் யங் லியூ டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய நிலையில், இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!