பொது வெளியில் கஞ்சா நுகர்ந்த மூவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது
#SriLanka
#drugs
#Arrest
#Police
#Court Order
#sri lanka tamil news
#Lanka4
Prasu
2 years ago

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் சந்தி பகுதியில் பொது வெளியில் கஞ்சா நுகர்ந்த மூவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் திருநெல்வேலி மற்றும் ஜோகபுரம் பகுதியை சேர்ந்த 30 வயதுக்கு குறைந்தவர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து குறிப்பிட்ட அளவு கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.



