இலங்கை தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை பாதித்த காரணங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் வருமான சேகரிப்பு மூலம் செலவினத் தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்கத்தினால் இயலாமையே இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு பிரதான காரணம் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
2021 ஆம் ஆண்டில், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், வரி வருமானம் 7 வீதம் மற்றும் பத்தில் 3 ஆக இருந்தது. உலக நாடுகளுக்கிடையில் மிகக் குறைந்த நிதி வருமானத்தை ஈட்டிய சந்தர்ப்பம் இது என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் ஏற்படும் இடைவெளியை நிரப்ப சர்வதேச கடன் வழங்குநர்கள் நிதி வசதிகளை வழங்க மாட்டார்கள் என்று சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது.
அமுல்படுத்தப்பட்ட வரி அதிகரிப்புக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், கடனாளிகளின் நம்பிக்கையை மீளப் பெறுவதற்கு இலங்கையில் வரி சீர்திருத்தங்கள் அவசியம் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



