37 வகையான மருந்துகளை உடனடியாக வழங்க ஒப்புக்கொண்ட உலக சுகாதார ஸ்தாபனம்
#SriLanka
#sri lanka tamil news
#Tamil People
#Tamil
#Tamilnews
#Health
#World_Health_Organization
#Health Department
Lanka4
2 years ago

நாட்டில் போதியளவு மருந்து வகைகள் இல்லாத காரணத்தால் 37 வகையான மருந்துகளை உடனடியாக வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் ஒத்துழைத்துள்ளது
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதுதொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள மருந்துப் பற்றாக்குறை மற்றும் சுகாதார நிலைமைகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் ,தெரிவித்துள்ளார்.



