வெளிநாடு செல்ல முயன்று தற்போது வியட்நாமில் உள்ள சிலர் இலங்கை வர விருப்பம்!

#SriLanka #Refugee #Arrest #sri lanka tamil news #Tamil People #people #Tamilnews #Lanka4
Mayoorikka
2 years ago
வெளிநாடு செல்ல முயன்று தற்போது வியட்நாமில் உள்ள சிலர் இலங்கை வர விருப்பம்!

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்று படகு விபத்தில் நிற்கதியாகி தற்போது வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் சிலர் மீண்டும் இலங்கை திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வியட்நாமில் தற்போது 152 இலங்கை அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 பேர் மீண்டும் இலங்கை  திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இவர்களை நாட்டுக்கு அனுப்புவதற்கு தேவையான நிதி வசதிகளை அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு முன்னெடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவர்களுக்கான அன்றாட தேவைகளை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் முன்னெடுத்து வருகிறது.

வியட்நாமின் ஹனோயில் உள்ள இலங்கை தூதரகம், இந்த விடயம் தொடர்பில், யு. என். எச். சி. ஆர் மற்றும் ஐ. ஓ. எம். ஆகிய இரண்டு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கைக்கு திரும்பிவர இணக்கம் தெரிவிக்காத 130 பேரும் அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு ஊடாக மூன்றாம் தரப்பு நாடுகளிடம் தீர்வை கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!