சுகாதார அமைச்சர் பதவி கிடைத்தால் நாட்டை மீட்டெடுப்பேன்! எதிர்க்கட்சி எம்பி
#SriLanka
#Health
#Health Department
#Minister
#ChiefMinister
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

தமக்கு சுகாதார அமைச்சர் பதவி கிடைத்தால் நாட்டை துரதிஷ்டமான நிலையில் இருந்து மீட்டெடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வந்திருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மக்களுக்கு உணவளிக்க வேண்டுமே தவிர தேர்தல் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
எந்தவொரு அரசாங்கமும் தனது எதிர்கால நலன் கருதி அமைச்சர்களை நியமிக்கும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



