உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடக்குமா? இல்லையா? இன்று தீர்மானம்
#Election
#Election Commission
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#Tamilnews
Prathees
2 years ago
உள்ளூராட்சி மன்ற தேர்தல் திகதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை நடத்தக்கூடிய திகதி அல்லது தேர்தலை பிற்போடுவது குறித்து இன்று அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்தக்கூடிய திகதியை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அறிவித்ததையடுத்து ஆணைக்குழுவின் இணக்கப்பாடு இன்று அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
மாவட்ட தேர்தல் அதிகாரிகளை வழங்கும் திகதி தொடர்பில் தமது ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று கூடி இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.