குடு அஞ்சுவின் பணம் வசூலித்த தம்பதி கைது!

டுபாயில் தலைமறைவாகியுள்ள இரத்மலானை குடு அஞ்சுவின் நிதி விவகாரங்களை நிர்வகித்த 26 மற்றும் 32 வயதுடைய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 14 இலட்சம் ரூபா பணத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துருகிரிய ஒருவல பிரதேசத்தில் இரண்டு மாடி கொண்ட சொகுசு வீடொன்றில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குடு அஞ்சுவின் உறவினர் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சந்தேகநபர் முச்சக்கர வண்டியில் சென்று போதைப்பொருள் வியாபாரிகளிடம் பணம் வசூலித்ததாகவும், பின்னர் அதற்காக சொகுசு காரை குடு அஞ்சு கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரின் மனைவி போதைப்பொருள் மூலம் சம்பாதித்த பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான கணவன் மற்றும் மனைவி தம்பதியினர் 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 2021 ஜூன் 03 அன்று அதுரிகிரிய பிரதேசத்தில் வைத்து அத்துரிகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



