துவிச்சக்கர வண்டியில் ரோந்தில் சென்ற இராணுவத்தினரின் மீது இடையூறு விளைவித்த நபர்கள் கைது
#Sri Lankan Army
#Police
#Arrest
#sri lanka tamil news
#SriLanka
#Lanka4
Kanimoli
2 years ago

நீர்வேலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் ரோந்தில் சென்ற இராணுவத்தினரின் மீது, மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை குறுக்கே விட்டு இடையூறு விளைவித்திருந்தனர்.
கோப்பாய் சந்தியில் உள்ள இராணுவமுகாமில் கடமை புரியும் இராணுவத்தினர் மீதே குறித்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசாரினால் பூதர் மடம் மற்றும் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



