டயானாவின் குடியுரிமை பற்றிய விசாரணைகள் தொடர்பாக நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை மற்றும் கடவுச்சீட்டு தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வாக்குமூலங்களின் பிரதிகளையும் இம்மாதம் 23ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று (02) உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகளுக்கு சட்டமா அதிபரின் உதவியை நாட தீர்மானித்துள்ளதாக தெரிவித்த பிரதம நீதவான், அது தொடர்பில் சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக தெரிவித்தார்.
சட்டமா அதிபரின் ஆதரவைப் பெறுவதன் மூலம் வழக்கு தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என நீதவான் திறந்த நீதிமன்றில் தெரிவித்தார்.
இந்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்தது.



