மினுவாங்கொடை நீதிமன்ற வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி
#Police
#Investigation
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago

மினுவாங்கொடை மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சிறிய துப்பாக்கி ரக துப்பாக்கி ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
நீதிமன்ற வளாகத்தில் குப்பை குவியலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரே குறித்த துப்பாக்கியை முதலில் பார்த்ததாக பொலிஸார் தெரிவித்தனர்..
மினுவாங்கொடை மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றத்தின் பிரதம எழுத்தர் செய்த முறைப்பாட்டின் பேரில்
பொலித்தீன் பையில் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி சிதைவடைந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏதேனும் குற்றச்செயல் செய்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் கைத்துப்பாக்கி கொண்டு வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலதிக விசாரணைக்காக கைத்துப்பாக்கி அரச பரிசோதகர்க்கு அனுப்பி வைக்கப்படும் என மினுவாங்கொடை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



