லெபனான் நோக்கி புறப்பட்ட இலங்கை இராணுவத்தினர்
#SriLanka
#sri lanka tamil news
#Sri Lankan Army
#UN
#Lanka4
Prathees
2 years ago
இலங்கை இராணுவத்தின் 14ஆவது தலைமையக பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த 125 பேர் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் கடமைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து லெபனான் நோக்கி இன்று புறப்பட்டனர்.
இந்தக் குழுவில் 02 பெண் அதிகாரிகளும் 08 பெண் இராணுவத்தினரும் இருந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
லெபனான் இடைக்காலப் படையில் வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை அடையாளம் காண பிரத்யேக பயிற்சி பெற்ற "ஃபிராங்க், ஜூபிடர், டைகர் மற்றும் லீனா" என்ற நான்கு நாய்கள் பணிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.