கொழும்பில் 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு
#water
#SriLanka
#sri lanka tamil news
#Tamil
#Tamilnews
#Tamil People
#Lanka4
Prabha Praneetha
2 years ago

கொழும்பு - புறநகர் பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளத
இதன்படி, கொழும்பு 1,2,3,4,7,8,9,10 மற்றும் 11 வரையான பகுதிகளுக்கும், கடுவலை நகரம் அதனை அண்டிய பகுதிகளுக்கும் நீர்விநியோகம் தடைப்படவுள்ளது.
கொலன்னாவை நகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களுக்கும், வெல்லப்பிட்டி, கொட்டிகாவத்தை பகுதிகளுக்கும் குறித்த காலப்பகுதியில் நீர்விநியோகம் தடைப்படுமென நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியினுள் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



