வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு : நிதி இராஜாங்க அமைச்சர்

கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் 1.7 பில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டு கையிருப்பு தொகை 2023 பெப்ரவரி முதல் வாரத்தில் 23.5% வளர்ச்சியை அடைந்து 2.1 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மேற்கொண்டுள்ள நல்ல பொருளாதார தீர்மானங்களின் விளைவாக ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
2022 செப்டம்பரில் உணவுப் பணவீக்கம் 94.9% ஆக இருந்ததாகவும், 2023 ஜனவரியில் அது 60.1% ஆகக் குறைந்துள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
2022 செப்டெம்பர் மாதம் வரை 29,802 ஆக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 261% அதிகரித்து 2023 பெப்ரவரிக்குள் 107,639 சுற்றுகளாக பதிவு செய்யப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
கொள்வனவு விலை 343.97 ரூபாவாகவும், விற்பனை விலை 356.73 ரூபாவாகவும் காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.



