விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக்கன்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
#Fuel
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

இன்று முதல் விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்கும் வகையில் டோக்கன்களை வழங்குவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நாட்டில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்துவதற்காக சீன அரசாங்கம் 6.98 மில்லியன் லீட்டர் டீசலை இலவசமாக வழங்கியிருந்தது.
விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் நாட்டின் பல மாவட்டங்களுக்கு உரிய டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், இன்று கொழும்பு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு எரிபொருள் டோக்கன்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
அதன்படி இன்று முதல் அனைத்து விவசாயிகளும் நியமிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.



