ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 2.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக ஆப்கானிஸ்தான் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள தஜிகிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இதேவேளை இதற்கு முன்னரும் ஆப்கானிஸ்தானின் பைசாபாத் பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பெப்ரவரி 28-ம் திகதி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொடர்ச்சியாக ஏற்படும் நிலநடுக்கங்கள் அங்குள்ள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை இந்த வாரங்களில் பல நாடுகளில் கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாக நெதர்லாந்து புவியியலாளர் ஃபிராங்க் ஹூனர்பெர்க் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



