இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திடம் உறுதி வழங்கிய சீனா!

#SriLanka #China #IMF #Finance #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திடம் உறுதி வழங்கிய சீனா!

இலங்கை போன்ற நாடுகளின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சீனா பங்கேற்கத் தயாராக  உள்ளதாக சீனா சர்வதேச நாணய நித்தியத்திடம் தெரிவித்துள்ளதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கையின் கடன் விண்ணப்பத்திற்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பான ஆவணங்களை சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி நிதியமைச்சகத்திடம் கையளித்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தினசரி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் குறுகிய கால கடன் வசதிகளை செலுத்துவதற்கு இரண்டு வருடங்கள் வழங்கப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசாரணைக்கு பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங், சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்கள் மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்கள் உட்பட வர்த்தக கடன் வழங்குநர்கள் இலங்கைக்கு அதிகபட்ச பங்களிப்புகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும், இலங்கையின் கடன் சுமையை குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் சாதகமான பங்கை வகிக்க சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் போன்ற கடன் சுமையில் உள்ள நாடுகளுக்கு ஒரு முக்கிய கடன் வழங்குநரான சீனா, இறையாண்மைக் கடனை மறுசீரமைப்பதற்கு பங்கு வகிப்பதாகவும் கூறியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!