சிவராத்திரி தினத்தன்று நல்லூரில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது

#Nallur #Jaffna #Arrest #Police #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
சிவராத்திரி தினத்தன்று நல்லூரில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய  பிரதான சந்தேகநபர் கைது

சிவராத்திரி தினத்தன்று நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய பிரதான சந்தேகநபர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பதினெட்டாம் திகதி மகாசிவராத்திரி தினத்தன்று அதிகாலை வேளை நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் இன்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலானஅணியினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாளும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதான சந்தான நபர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!