மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு வருகை தந்த சீன சுற்றுலாப் பயணிகளின் முதல் குழு

#China #Tourist #Colombo #SriLanka #sri lanka tamil news #Lanka4
Prathees
2 years ago
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு வருகை தந்த சீன சுற்றுலாப் பயணிகளின் முதல் குழு

கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகுஇ சீன சுற்றுலாப் பயணிகளின் முதல் குழு இலங்கைக்கு வருகைதந்துள்ளது.

இலங்கையின் விசேட விமானம் மூலம் 117 சீன சுற்றுலாப் பயணிகள் நேற்று (01) இரவு இலங்கை வந்தடைந்ததாக  தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோஇ வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சாங் ஹொங் உள்ளிட்டோர் குழுவை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ,

"மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கோவிட் -19 க்குப் பிறகுஇ சீன சுற்றுலாப் பயணிகள் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இன்று முதல் அவர்கள் உலகம் சுற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று முதல் முறையாக சிறப்பு விமானம் இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஏப்ரல் 4 முதல், ஸ்ரீலங்கன் மற்றும் சைனா ஈஸ்டன் விமானங்கள் ஷாங்காய், பெய்ஜிங் மற்றும் கோங்ஷு ஆகிய மூன்று நகரங்களுக்கு வாரத்திற்கு 9 முறை இலங்கைக்கு வரும்.

இலங்கையின் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப முடியும் என்பதில் பெரும் நம்பிக்கை உள்ளது என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!