தேர்தலுக்கு வேட்புமனுக்களை கையளித்த அரச ஊழியர்களின் சம்பளம் குறித்த முடிவு

#Election #Salary #Staff #government #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
தேர்தலுக்கு வேட்புமனுக்களை கையளித்த அரச ஊழியர்களின் சம்பளம் குறித்த முடிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்த அரச அதிகாரிகள் தாம் தற்போது எதிர்நோக்கி வரும் பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் நாளை முடிவெடுக்கும் என்றார்.

தேர்தலை மேலும் தாமதப்படுத்தினால்இ வேட்புமனுக்களை சமர்ப்பித்து தற்போது சம்பளம் பெறாத அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் முறைமையொன்று தயாரிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் பணத்தை தேர்தலை நடத்துவதற்கு வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கூறினாலும்இ வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் தொகை எந்த அமைச்சுக்கும் சமமாக இருக்காது என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 7இ000 பேர் அரச மற்றும் பிற பொது சேவைகளில் ஈடுபட்டுள்ளதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!