நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது
#India
#Cinema
#Actor
Mani
2 years ago
-1-1-1-1.jpg)
ரிஷப் ஷெட்டி இயக்கிய காந்தாரா திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது.கன்னடத்தில் சிறிய பட்ஜெட்டில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படங்களில் அதிக வசூல் செய்த கன்னடப் படம் திரையுலகினரையும், ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் வசூல் சாதனை படைத்தது.
கர்நாடகாவில் வாழும் பழங்குடியின மக்களின் மத வழிபாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை பலரும் பாராட்டினர். அதன்பிறகு, படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023ஆம் ஆண்டுக்கான 'சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர்' என்ற பிரிவில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இந்த விழா நேற்று (பிப்ரவரி 20) மும்பையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



