இலங்கையில் செயற்படும் ஜேர்மன் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

#SriLanka #sri lanka tamil news #Lanka4 #Tamil #Tamilnews
Prathees
2 years ago
இலங்கையில் செயற்படும் ஜேர்மன் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

இறக்குமதித் தடை தொடரும் பட்சத்தில், இலங்கையில் செயற்படும் ஜேர்மன் நிறுவனங்கள், நாட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ளது.

எனினும் இந்த தடையை தளர்த்துமாறு ஜேர்மனி, இலங்கை அரசகாங்கத்தை வலியுறுத்தி வருகிறது.

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹொல்கர் சேபோட், இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் 2 ஆண்டுகளுக்கு இறக்குமதி தடை நீடித்தால் சில நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பல ஜேர்மன் நிறுவனங்கள் இலங்கையில் இயங்கி வருகின்றன.

அவை, வாகன உதிரி பாகங்கள் உட்பட ஜேர்மன் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துகின்றன.

எனினும் இறக்குமதி தடை அதற்கு பாதகமாக அமைந்துள்ளது.

இலங்கை வங்குரோத்தானதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ஜேர்மனியும் இலங்கைக்கு கடன்களை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டவுடன் நிலைமை மேம்படும் என்று நம்புவதாக ஜேர்மன் தூதுவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!